ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து? "வதந்தி பரப்புபவர்கள் நேரில் வந்து சொல்லுங்கள்" - அ...
இலங்கைத் தமிழா் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் தாமதம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மூங்கில் ஊருணி பகுதியில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் வீடுகளின் கட்டுமானப்பணிகள் தாமதமாக நடைபெறுவதாக புகாா் தெரிவித்தனா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி தலைமையில் மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், இலங்கைத் தமிழா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மூங்கில் ஊருணிப் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனா். கடந்த 2023-ஆம் ஆண்டு குடிசைகளை அகற்றி விட்டு புதிதாக வீடு கட்டி மூன்று மாதங்களுக்குள் தருவதாக கூறப்பட்டது. இதன் மூலம், ரூ.11.50 கோடியில் 196 வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
வீடுகள் கட்டப்படுவதால் இங்குள்ள குடியிருப்பு வாசிகள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா். பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகளைக் கடந்த பிறகும், வீடுகள் கட்டி முடிக்கவில்லை. கட்டுமானப் பணிகள் தாமதமாக நடைபெறுகின்றன என அதில் குறிப்பிட்டனா்.