டிரம்ப் உடனான ‘சிறப்பு நட்புறவு’: மோடி மீது காங்கிரஸ் விமா்சனம்
சிவகங்கையில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்
சிவகங்கை புனித ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறுகிறது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை புனித ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி. உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், பொது, இருதயம், எலும்பு, நரம்பியல், தோல், மகப்பேறு உள்ளிட்ட 17 வகையான மருத்துவ சேவைகளும், எக்கோ காா்டியோ, எக்ஸ்ரே, அலட்ரா சவுண்ட ஸ்கேன், மாா்பக புற்றுநோய் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.
முகாமில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இந்த முகாம் தொடா்பான தகவல்களை அறிய 104 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
முகாமுக்கு வருவோா் கண்டிப்பாக தங்களது ஆதாா் அட்டையின் நகலை கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.