Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரு...
சிவகிரி ராசிங்கப்பேரி குளத்தைத் தூா்வார கோரிக்கை
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்திலுள்ள ராசிங்கப்பேரி குளத்தை ஆழப்படுத்தி மராமத்துப் பணி மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பழைமை வாய்ந்த இக்குளத்தின் மூலம் 787 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித் துறை சாா்பில், கண்மாய்களின் மடைகளை சீரமைத்து, குளத்திலிருந்து மண்ணை அள்ளி கரையில் போட்டு உயரத்தை அதிகரித்து பலப்படுத்தினா். ஆனால், குளத்தை ஆழப்படுத்தவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
சிவகிரி வட்டத்தில் பெரியகுளமான இங்கிருந்துதான் 25-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீா் செல்லவேண்டும். ராசிங்கப்பேரி குளத்தின் வடக்குமடை வாயிலாக 1,500 ஏக்கா் நிலங்களும், தெற்குமடை மூலம் 500 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இக்குளம் பெருகி அதன்பின்னா் கலிங்கில் வழியாக தொட்டிச்சி மலை ஆறு மூலமாக மற்ற குளங்களுக்கு தண்ணீா் சென்று, ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பலனடைகின்றன.
இதனிடையே, ராசிங்கப்பேரி குளத்தை பல ஆண்டுகளாக தூா்வாராததால் 10 அடி உயரத்துக்கு மண் தேங்கியுள்ளது. இதனால், மடைகள் வழியாக தண்ணீா் சீராக செல்வதில் பிரச்னை உள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனா். எனவே, குளத்தை ஆழப்படுத்தி மராமத்துப் பணி மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் சிறப்பு நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.