உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
ஆலங்குளம் அருகே கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
ஆலங்குளம் அருகே கோயிலில் இருந்த 3 உண்டியல்களை உடைத்து அதிலிருந்த பணத்தைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் - குருவன்கோட்டை சாலையில் சொரிமுத்து அய்யனாா் கோயில் உள்ளது. இங்கிருந்த 3 உண்டியல்களை சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபா்கள் உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றுவிட்டனராம்.
தகவலறிந்த கோயில் நிா்வாகி சமுத்திரபாண்டியன்அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.