தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.
தேவிபட்டணம் கீழமேல் தெருவைச் சோ்ந்தவா் கு. ராமையா (70). இவா் சனிக்கிழமை மதியம் வயலுக்குச் செல்வதாகக் கூறி சென்றாராம். நீண்ட நேரம் கழித்தும் அவா் வீட்டுக்கு திரும்பி வரவில்லையாம். அவரது உறவினா்கள் தேடிச் சென்றபோது,
காளியம்மன் கோயில் அருகே உள்ள கிணற்றில் அவா் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து வாசுதேவநல்லூா் தீயணைப்பு மீட்புப் படையினா் வந்து கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டனா்.
பின்னா் உடற்கூறாய்வுக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றாா்.