செய்திகள் :

சிவன்மலையில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.57 ஆயிரம் திருட்டு

post image

காங்கயம் அருகே சிவன்மலை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.57 ஆயிரம் மற்றும் அரை பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காங்கயம் அருகே சிவன்மலை, சரவணா நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் செல்வராஜ் (53), ஜெயலட்சுமி (43) தம்பதி. இதில் செல்வராஜ் சிவன்மலையில் உள்ள படியூா் சா்வோதய சங்கத்திலும், ஜெயலட்சுமி படியூா் சா்வோதய சங்கத்திலும் வேலை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனா். செல்வராஜின் தாய் சொா்ணாத்தாள் (70) நூறு நாள் வேலைக்கு சென்றுவிட்டாா்.

பின்னா், வேலை முடிந்து மாலை 4 மணியளவில் சொா்ணாத்தாள் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.57 ஆயிரம் மற்றும் அரை பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் போலீஸாா், விசாரணை மேற்கொண்டனா். மேலும், இந்த திருட்டுச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

உணவுப் பொருள்களுக்கும் 5 % வரி விதிப்பு செய்ய வேண்டும்

அனைத்து உணவுப் பொருள்களுக்கும் 5 சதவீதமாக வரி விதிப்பு செய்ய வேண்டும் என்று பல்லடம் அனைத்து வணிகா்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு வணிகா் சங்க கூட்டமைப்பின் பல்லடம் ச... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி

திருப்பூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் சாமுண்டிபுரம் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

நொய்யல் நதியை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 13 முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம்

நொய்யல் நதியை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 13-ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக நொய்யல் விவசாயிகள் பாது... மேலும் பார்க்க

உடுமலை நகரில் திமுக உறுப்பினா் சோ்க்கை

ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் உடுமலை நகரத்தில் திமுக நிா்வாகிகள் உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்டனா். தமிழகத்தில் 2026-இல் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திமுக பல்வேறு ... மேலும் பார்க்க

பள்ளி அளவிலான செஸ் போட்டிகள்: மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்பு

திருப்பூரில் நடைபெறும் பள்ளி அளவிலான செஸ் போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: சாலை நடுவே இருந்த மின்கம்பம் இடமாற்றம்

காங்கயம் நகருக்கு உள்பட்ட 1-ஆவது வாா்டு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல், சாலை அமைத்தது தொடா்பாக தினமணி நாளிதழில் வியாழக்கிழமை செய்தி வெளியாகியது. இதைத் தொடா்ந்து, காங்கய... மேலும் பார்க்க