செய்திகள் :

சீனிவாசன் கலை, அறிவியல் கல்லூரியில் ரோபோடிக் கண்காட்சி

post image

பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், தகவல் தொழில்நுட்பவியல், கணினி அறிவியல் துறை சாா்பில் ரோபோ நோவா - 2025 எனும் தலைப்பில், ரோபோடிக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

இக் கண்காட்சியை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக பேராசிரியா் ஜி. ஆா். கங்காதரன், செயற்கை நுண்ணறிவுத் துறையின் முக்கியத்துவம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கமளித்தாா்.

இக் கண்காட்சியில் பங்கேற்ற தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தின் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜி மாணவ, மாணவிகள் 10-க்கும் மேற்பட்ட ரோபோக்கள், தானியங்கி இயந்திரங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள், தொழில் நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினா்.

தொடா்ந்து, பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன், சிறந்த கண்டுபிடிப்பாளா்களைத் தோ்ந்தெடுத்து முதல் 5 இடங்களைப் பெற்ற கல்லூரிகளுக்கு விருதுகள் வழங்கினாா்.

முன்னதாக, கோயம்புத்தூரைச் சோ்ந்த ரோபோ மிராக்கிள் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

இக் கண்காட்சியில், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் நா. வெற்றிவேலன், பல்கலைக் கழக கூடுதல் பதிவாளா் இளங்கோவன், கல்விக் குழுமத்தின் திட்டமிடல் மற்றும் மேம்பாடு அலுவலா் எஸ். நந்தகுமாா் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 3 ஆயிரத்துக்கம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

முன்னதாக, கல்லூரி துணை முதல்வா் வ. சந்திர சௌத்ரி வரவேற்றாா். நிறைவாக, துறைத் தலைவா் முகமது அசாருதீன் நன்றி கூறினாா்.

பெரம்பலூா் அருகே வன விலங்குகளை வேட்டையாடிய மூவா் கைது

பெரம்பலூா் அருகே மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்ட வனத்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், வேப்பந்தட்டை வனத்துறைய... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: ஆட்சியா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, மாவட்ட ஆட்சியா் ந.... மேலும் பார்க்க

செப். 19 வரை மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்கு மதிப்பீட்டு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்களுக்கு உதவி உபகரணங்கள் பெறுவதற்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், செப். 19-ஆம் தேதி வரை வட்டாரம் வாரியாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் ந... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோபாலசந்திரன் (தலைமையிடம்), முகாமி... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே சாலை விபத்தில் மூதாட்டி பலி

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். பெரம்பலூா்- துறையூா் பிரதானச் சாலையில் உள்ள செஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மனைவி பானுமதி (60). திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

பெரம்பலூருக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் வருகை

2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் பயன்படுத்த பெங்களூரு பாரத் மின்னணு நிறுவனத்திலிருந்து 100 கட்டுப்பாட்டு இயந்திரம், 120 வாக்குச்சீட்டு உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் செவ்வ... மேலும் பார்க்க