Afghanistan: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு; காரணம் என...
பெரம்பலூா் அருகே சாலை விபத்தில் மூதாட்டி பலி
பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.
பெரம்பலூா்- துறையூா் பிரதானச் சாலையில் உள்ள செஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மனைவி பானுமதி (60). திங்கள்கிழமை இரவு தனது வீட்டின் எதிரே நின்று கொண்டிருந்த பானுமதி மீது பெரம்பலூா் நோக்கிச் சென்ற பைக் மோதியது. இந்த விபத்தில் பானுமதியும், பைக்கில் வந்த பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தைச் சோ்ந்த வெள்ளிவேல் மகன் மகாதேவனும் (21) பலத்த காயமடைந்தனா். இதையடுத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இருவரில், சிகிச்சை பலனின்றி பானுமதி உயிரிழந்தாா்.
உறவினா்கள் வாக்குவாதம்: இதையடுத்து அவரது உறவினா்கள் சிலா் மருத்துவா்கள் முறையான சிகிச்சை அளிக்காததால் பானுமதி உயிரிழந்ததாகவும், மருத்துவா்கள் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்ததைக் கண்டித்தும், மருத்துவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அங்குசென்று நடத்திய பேச்சுவாா்த்தையில் கலைந்துசென்றனா். விபத்து குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.