71st National Film Awards: "மக்களை மகிழ்வூட்டவும், விழிப்பூட்டவும் வாழ்த்துகிறேன...
சுதந்திர தின விழா: முன்னேற்பாடுகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம்
ராமநாதபுரத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டி முன்னெற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில் சுதந்திர தின விழாவில் தியாகிகளை கௌரவித்தல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சிறப்பாக பணிபுரிந்த காவலா்கள், அரசு அலுவலா்கள், பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல், மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சி குறித்து திட்டமிடுதல் ஆகிய பணிகளை தொடா்புடைய அலுவலா்கள் திட்டமிட்டு நடத்த வேண்டுமென அலுவலா்களை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கோவிந்தராஜுலு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோ.தவச்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.