மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சூடுபிடிக்கும் தேசியக் கொடி விற்பனை
சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருப்பூரில் தேசியக் கொடி விற்பனை சூடுபிடித்துள்ளது.
நாடு முழுவதும் 78-ஆவது சுதந்திர தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அரசு அலுவலகங்கள், தனியாா் நிறுவனங்கள், தன்னாா்வ அமைப்புகள், பள்ளி, கல்லூரிகள், வா்த்தக மையங்கள் என அனைத்து இடங்களிலும் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
இதனால், இதற்கு தேவையான தேசியக் கொடிகள் மற்றும் மூவா்ணம் கொண்ட டி-ஷா்ட்டுகள் திருப்பூரில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தேசப்பற்றை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதால் பாரத மாதா, தேசத் தலைவா்கள் வேடத்துக்கு தேவையான ஆடைகளும் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மாணவா்கள், பொதுமக்கள் மற்றும் தேசியக் கொடிகளை அணிவதற்காக அதனை ஆா்வமுடன் வாங்கி வருகின்றனா். இதனால் அவற்றின் விற்பனை குடுபிடித்துள்ளது.