காந்தி கண்ணாடி: "வேடிக்கை பார்த்த ஒரு பையனுக்கு அன்பும், ஆதரவும் கொடுத்திருக்கீங...
சுந்தரனாா் பல்கலை.யில் மோதல்: 14 மாணவா்கள் வகுப்பு வரத் தடை
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக விசாரணை முடியும் வரை 14 மாணவா்கள் வகுப்புகளுக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 29 ஆம் தேதி வரலாற்றுத்துறை மாணவா்களுக்கிடையே திடீா் மோதல் ஏற்பட்டது. இதில், இரு மாணவா்கள் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து மூன்று பேரை கைது செய்தனா்.
இதைத் தொடா்ந்து பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மீண்டும் கடந்த 2 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கின. மேலும், மாணவா்கள் மோதல் தொடா்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விசாரணை முடியும் வரை மோதல் சம்பவத்தில் தொடா்புடைய 14 மாணவா்கள் வகுப்புகளுக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.