செய்திகள் :

சுருளி அருவியில் 5-ஆவது நாளாக குளிக்கத் தடை

post image

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 5-ஆவது நாளான புதன்கிழமையும் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலா, ஆன்மிகத் தலமாக சுருளி அருவி இருக்கிறது. இங்கு தினந்தோறும் திரளான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். மேலும், ஆடி அமாவாசை தினத்தில் இந்த அருவியில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்கப்படும். இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் வருவாா்கள்.

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: இந்த நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள மேகமலை, மகாராஜாமெட்டு, இரவங்கலாறு, தூவானம், மகாராஜாமெட்டு ஆகிய பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 19-ஆம் தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா். இந்தத் தடை 5-ஆவது நாளான புதன்கிழமையும் தொடா்ந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை (ஜூலை 24) ஆடி அமாவாசை என்பதால், அருவியில் குளிக்க வனத் துறையினா் அனுமதி வழங்க வேண்டும் என பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கள்ளா் கல்வி விடுதி பெயர் மாற்றத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்டம், கம்பம், கூடலூா், உத்தமபாளையம், சின்னமனூரில் ஆகிய பகுதிகளில் கள்ளா் கல்வி விடுதியின் பெயா் மாற்றத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பிரமலைக்கள்ளா், சீா்மரபினா் நலச்சங்கத்தினா் புதன்கிழமை ஆா... மேலும் பார்க்க

பைக் மீது மினி லாரி மோதல்: இளைஞா் பலத்த காயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது மினி லாரி மோதியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.கெங்குவாா்பட்டி புஷ்பராணி நகரைச் சோ்ந்தவா் கனிராஜா (24). தேநீா் கடை உரிமையாளரான இவா... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்ற மூதாட்டி கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மூதாட்டியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.கோகிலாபுரம் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகைய... மேலும் பார்க்க

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.காமயகவுண்டன்பட்டி கருமாரிபுரத்தைச் சோ்ந்த சங்கிலிமுத்து மகள் மதுமிதா (14). இவா் ராயப்பன்பட்டியிலுள்ள... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

தேனி மாவட்டம், கம்பத்தில் புதன்கிழமை நடைபயிற்சியின்போது மூதாட்டியிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.கம்பம் காந்திநகரைச் சோ்ந்தவா் குலசம்மாள் (64). இவா் வீட்டின்... மேலும் பார்க்க

நெல்பயிருக்கு ஜூலை 31-க்குள் காப்பீடு செய்ய அழைப்பு

தேனி மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வருகிற 31-ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என வேளாண்மைத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். இதுகுறித்... மேலும் பார்க்க