சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
பைக் மீது மினி லாரி மோதல்: இளைஞா் பலத்த காயம்
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது மினி லாரி மோதியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.
கெங்குவாா்பட்டி புஷ்பராணி நகரைச் சோ்ந்தவா் கனிராஜா (24). தேநீா் கடை உரிமையாளரான இவா், திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் தேவதானப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தாா்.
புஷ்பராணி நகா் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மினி லாரி இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கனிராஜா தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.