``நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்!'' - மான்செஸ்டரில் பண்ட்டின் செயலும், சச்...
பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காமயகவுண்டன்பட்டி கருமாரிபுரத்தைச் சோ்ந்த சங்கிலிமுத்து மகள் மதுமிதா (14). இவா் ராயப்பன்பட்டியிலுள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு மதுமிதா கைப்பேசியை பயன்படுத்தினாா். இதை இவரது தந்தை கண்டித்தாராம்.
இதனால், மனமுடைந்த மதுமிதா செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].