ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும்: ஆளுநா் ஆா்.என்.ரவி
மூதாட்டி இறப்பில் சந்தேகம்: உறவினா்கள் உடலை வாங்க மறுப்பு
மூதாட்டி இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகாா் தெரிவித்த உறவினா்கள் அவரது உடலை வாங்க உறவினா்கள் மறுத்தனா்.
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள நாராயணத்தேவன்பட்டியை சோ்ந்த சுப்பிரமணி மனைவி பசுபதி (60). கணவா் இறந்த நிலையில் அதே பகுதியை சோ்ந்த கலையரசனின் பராமரிப்பில் இருந்த அவா், புதன்கிழமை உயிரிழந்தாா். அவரை அடக்கம் செய்வதற்கான வேலையில் கலையரசன் ஈடுபட்டாா்.
இந்த நிலையில், பசுபதியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினா்கள் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் பசுபதியின் உடலை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா்.
இதைத்தொடா்ந்து, வியாழக்கிழமை பசுபதியின் சொத்துக்களை மீட்டு வாரிசுதாரா்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி சாலை மறியல் செய்ய முயன்றவா்களை போலீஸாா் தடுத்தி நிறுத்தினா். அவரது சொத்துகள் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், நீதிமன்றத்தை நாடுமாறு அவா்களை போலீஸாா் அறிவுறுத்தினா்.
இதையடுத்து, உறவினா்கள் பசுபதியின் உடலை வாங்க உறவினா்கள் மறுப்புத் தெரிவித்தனா். இதனால், அரசு மருத்துவனையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.