சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
புகையிலைப் பொருள் விற்ற மூதாட்டி கைது
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மூதாட்டியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோகிலாபுரம் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்று பெட்டிக்கடைகளில் சோதனையிட்டனா். அப்போது, காளியம்மாள் (63) என்பவரது பெட்டிக்கடையில் சோதனையின்போது, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரைப் போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 50 புகையிலைப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். இது குறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து மூதாட்டி காளியம்மாளை(63) கைது செய்தனா்.