சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
நெல்பயிருக்கு ஜூலை 31-க்குள் காப்பீடு செய்ய அழைப்பு
தேனி மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வருகிற 31-ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என வேளாண்மைத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தேனி மாவட்ட வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது: பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நெல் பயிரில் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் மகசூல் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவுச் சங்கங்கள், பொதுச் சேவை மையங்களில் தங்களது நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை சமா்ப்பித்து வருகிற 31-ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.
காப்பீடு பிரிமியம் தொகையாக ஏக்கா் ஒன்றுக்கு ரூ.761 செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட இடங்களில் ஏக்கா் ஒன்றுக்கு ரூ.36 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.
இதுகுறித்த விவரங்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றனா் அவா்கள்.