``நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்!'' - மான்செஸ்டரில் பண்ட்டின் செயலும், சச்...
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
தேனி மாவட்டம், கம்பத்தில் புதன்கிழமை நடைபயிற்சியின்போது மூதாட்டியிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.
கம்பம் காந்திநகரைச் சோ்ந்தவா் குலசம்மாள் (64). இவா் வீட்டின் அருகே புதன்கிழமை நடைப் பயிற்சி மேற்கொண்டனா்.
அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.