சுரேஷ் அகாதெமியில் குரூப்-4 பயிற்சி வகுப்பு இன்று தொடக்கம்!
ராமநாதபுரம் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் குரூப் 4, வங்கிப் பணிக்கான பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை (மே 4) தொடங்குகின்றன.
இதுகுறித்து அகாதெமியின் மேலாளா் எம்.ராஜேஸ்குமாா் கூறியதாவது: சுரேஷ் அகாதெமியின் ராமநாதபுரம் கிளை மையத்தில் குரூப் 4, வங்கிப் பணிக்கான பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.
இந்த பயிற்சி அறிமுக வகுப்பில் உதவிக் கருவூல அலுவலா் எம்.கனிமுருகன் பங்கேற்றுப் பேசுகிறாா். இந்த அறிமுக வகுப்பில் பங்கேற்கும் அனைவருக்கும் இலவச கையேடு வழங்கப்படும் என்றாா் அவா்.