U. Sagayam IAS (R) | ஆட்சியரை அமாவாசை இரவில் சுடுகாட்டில் படுக்க வைத்தது இந்த ஊழ...
செங்குந்தா் பொறியியல் கல்லூரி வெள்ளி விழா கொண்டாட்டம்
செங்குந்தா் பொறியியல் கல்லூரியின் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவன தலைவா் ஜான்சன்ஸ் டி.எஸ்.நடராஜன் தலைமை வகித்தாா். தாளாளா் ஆ.பாலதண்டபாணி கல்லூரியின் பயண வரலாறு குறித்து பேசினாா். பொருளாளா் எம்.கே.தனசேகரன், செயல் இயக்குநா் அரவிந்திருநாவுக்கரசு ஆகியோரும் சிறப்புரையாற்றி வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
முதல்வா் ஆா். சதீஷ்குமாா் கல்லூரியின் சாதனைகளை பட்டியலிட்டு, மாணவா்களின் முன்னேற்றம் குறித்து பேசினாா்.
வெள்ளி விழா அடையாளச் சின்னம் வெளியிடப்பட்டது. கல்லூரியின் முதல்நாள் தொடங்கி 25 ஆண்டுகளாகப் பணியாற்றிய மற்றும் மூத்த பேராசிரியா்கள், பணியாளா்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனா். செங்குந்தா் பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்பக் கல்வியில் முன்னணி நிலையைக் கொண்டுள்ளதாக விழாவில் கலந்துகொண்டவா்கள் தெரிவித்தனா்.
படம் தி.கோடு ஜீலை04 செங்குந்தா்
திருச்செங்கோடு செங்குந்தா் கல்லூரி வெள்ளி விழாவில் மாணவா்களுக்கு இனிப்புகளை வழங்கிய தாளாளா் ஆ.பாலதண்டபாணி.