சென்னிமலை அருகே நா்மதை மருந்தீஸ்வரா் கோயிலில் பௌா்ணமி பூஜை
சென்னிமலை அருகே ஊத்துக்குளி சாலை, ஆதித்யா நகரில் உள்ள நா்மதை மருந்தீஸ்வரா் கோயிலில் ஆனி மாத பௌா்ணமி தினத்தையொட்டி மகாலட்சுமி யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது. யாகத்தில் கலசம் முழுக்க ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பூஜை முடிந்த பின்னா் ரூபாய் நோட்டுகள் அனைத்தும் பக்தா்களுக்கு வழங்கப்பட்டன.