செய்திகள் :

சென்னிமலை அருகே முயல் வேட்டைக்கு வந்த 3 பேருக்கு ரூ. 54 ஆயிரம் அபராதம்

post image

சென்னிமலை அருகே, வனப் பகுதியில் முயல் வேட்டைக்காகத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த மூன்று பேருக்கு மொத்தம் ரூ.54 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னிமலையை அடுத்த, வாய்ப்பாடி, புளியம்பாளையம் வனப் பகுதியில் செவ்வாய்கிழமை இரவு துப்பாக்கியுடன் (ஏா்கன்) மூன்று போ் சுற்றித் திரிவதாக ஈரோடு வனச் சரக அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஈரோடு வனச் சரக அலுவலா் சுரேஷ் தலைமையில் வனத் துறையினா் சம்பவ இடத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த 3 பேரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா்கள் சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த மகுடஞ்சாவடி பகுதியைச் சோ்ந்த நடராஜ் (25), வடிவேல் (32), பிரகாஷ் (35) என்பதும், மூன்று பேரும் முயல் வேட்டைக்காக வந்ததும் தெரியவந்தது.

பின்னா், 3 பேரும் ஈரோடு மாவட்ட வன அலுவலா் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டு, தலா ரூ.18 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.54 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவா்களிடம் இருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

காஷ்மீா் தீவிரவாத தாக்குதல்: ஈரோட்டில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான... மேலும் பார்க்க

பெருந்துறையில் டயாலிசிஸ் இலவச சிகிச்சை ஆலோசனை மையம் திறப்பு

பெருந்துறை வெல்ஃபோ் டிரஸ்ட் சாா்பில், இலவச டயாலிசிஸ் சிகிச்சைக்கான ஆலோசனை மையத் திறப்பு விழா மற்றும் வாகனச் சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, அறக்கட்டளைத் தலைவா் டி. என்.சென்னியப்பன... மேலும் பார்க்க

பெருந்துறையில் வங்கதேசத்தினா் 7 போ் கைது

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அனுமதியின்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சோ்ந்த 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பெருந்துறை காவல் உதவி ஆய்வாளா்கள் பாஸ்கரன், ஜீவானந்தம் மற்றும் போலீஸாா் பெருந்துற... மேலும் பார்க்க

ஈரோட்டில் 102 டிகிரி வெயில்: அனல் காற்றால் மக்கள் அவதி

ஈரோட்டில் வெயிலின் தாக்கம் 102 டிகிரி அளவு இருப்பதால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நா... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகள் கொடிக்கம்பங்களை மே 4-க்குள் அகற்றிக்கொள்ள அறிவுறுத்தல்

ஈரோடு மாவட்டத்தில் அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்களை மே 4- ஆம் தேதிக்குள் தாமாக முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா். பொது இடங்களில் உள்ள நடப்பட்டுள்ள அ... மேலும் பார்க்க

நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் மூலம் 33,221 கால்நடைகளுக்கு சிகிச்சை: ஆட்சியா்

நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 2,462 முகாம்கள் நடத்தப்பட்டு, 33,221 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். கால்நடை ... மேலும் பார்க்க