திருவள்ளூர்: பள்ளி சிறுமிக்கு பாலியல் சித்ரவதை; வீடியோ வெளியானதால் அதிர்ச்சி - த...
சென்னிமலை ஏகாந்த வெங்கடேச பெருமாள் கோயிலில் விமான பாலாலயம்
சென்னிமலை ஏகாந்த வெங்கடேச பெருமாள் கோயிலில் விமான பாலாலயம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
சென்னிமலை சுப்ரமணியசாமி கோயிலின் உப கோயிலான பழைமை வாய்ந்த ஏகாந்த வெங்கடேச பெருமாள் கோயில், சென்னிமலை பேருந்து நிலையம் அருகில் உள்ளது.
இந்தக் கோயிலில் திருப்பணிகளைத் தொடரும் வகையில் விமான பாலாலயம் புதன்கிழமை மாலை செய்யப்பட்டது.
இதில் சென்னிமலை அறங்காவலா் குழு தலைவா் ர.பழனிவேலு, உறுப்பினா்கள், கோயில் செயல் அலுவலா் ஏ.கே.சரவணன் மற்றும் பெருந்துறை கோயில் சரக ஆய்வாளா், அா்ச்சகா்கள், கோயில் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.