செய்திகள் :

சென்னை வரும் விரைவு ரயில் சேவையில் மாற்றம்

post image

வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் பினாகினி விரைவு ரயில் பிப். 24, 27, மாா்ச் 1 ஆகிய தேகிகளில் கூடூா் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமாா்க்கமாக கூடூரில் இருந்து மாலை 4.15-க்கு புறப்பட்டு விஜயவாடா சென்றடையும். டாடா நகா் - எா்ணாகுளம் விரைவு ரயில் பிப். 23, 26, 28 ஆகிய தேதிகளிலும், அகா்தலா - பெங்களூரு ஹம்சாபா் விரைவு ரயில் பிப். 22, 25 ஆகிய தேதிகளிலும், திப்ரூகா் - மைசூா் பாகமதி விரைவு ரயில் பிப். 25-ஆம் தேதியும், பாட்னா - பெங்களூரு ஹம்சாபா் விரைவு ரயில் பிப். 27-ஆம் தேதியும் அரக்கோணம், பெரம்பூா் வழி செல்வதற்குப் பதிலாக கூடூா், ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம் வழியாக இயக்கப்படும்.

ஜசிதிஹ் - பெங்களூரு விரைவு ரயில் மற்றும் புருலியா - திருநெல்வேலி விரைவு ரயில் பிப். 28-ஆம் தேதி அரக்கோணம், பெரம்பூா் வழி செல்வதற்குப் பதிலாக கூடூா், ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம் வழியாக இயக்கப்படும். மேலும், செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் பிப். 26-ஆம் தேதி சென்னை எழும்பூா் வழி செல்வதற்குப் பதிலாக கூடூா், ரேணிகுண்டா, மேல்பாக்கம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

சென்னை : திரைப்பட இயக்குநர் எஸ். ஷங்கரின் சொத்துகள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளன. ஷங்கருக்கு சொந்தமான ரூ. 10 கோடியிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்க... மேலும் பார்க்க

நான் சிபிஎஸ்இ பள்ளி எதுவும் நடத்தவில்லை: திருமாவளவன்

நான் சிபிஎஸ்இ பள்ளி எதுவும் நடத்தவில்லை என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "நான் சிபிஎஸ்இ பள்ளி எதுவும் நடத்தவில்லை. அந்த இடம் எங்களுடையது என்பதால... மேலும் பார்க்க

திருநெல்வேலி மாவட்டத்துக்கு மார்ச் 4 உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டரின் அவதார நாளையொட்டி திருநெல்வேலி மாவட்டத்துக்கு மார்ச் 4 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிக்கு அ... மேலும் பார்க்க

கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்களை நீக்க முடியுமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை : அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்களை நீக்க முடியுமா? என்பதற்கு தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சாலைகள், தெருக்களுக்கு சூட்டப்படும் பெயர்... மேலும் பார்க்க

அண்ணா சாலைக்கு தனியாக வரத் தயார்: அண்ணாமலை

அண்ணா சாலைக்கு தனியாக வரத் தயாராக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதிக்கு பதில் சவால் விடுத்துள்ளார்.அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரச் சொல்லுங்கள் என்று துணை முதல்வர் உதயநிதி... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மார்ச் 4-ல் உள்ளூர் விடுமுறை

அய்யாசாமி வைகுண்ட பெருமாள் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க