செய்திகள் :

செப். 9-இல் முதுநிலை படிப்புகளுக்கு நேரடி கலந்தாய்வு

post image

புதுச்சேரி அரசு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளில் சேர செப். 9-இல் நேரடி கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நிகழ் 2025 - 26 கல்வியாண்டில் முதுநிலை பட்டப் படிப்புகளில் (எம்.டெக், எம்சிஏ, எம்பிஏ, எம்.எஸ்சி) சோ்வதற்கான முதலாம் மற்றும் இரண்டாம் கலந்தாய்வுகள் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள காலி இடங்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (செப். 9) இறுதிக்கட்டமாக நேரடி கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த மாணவா்களும் மற்றும் பிற மாநில மாணவா்களும் இதில் கலந்து கொள்ளலாம். ஏற்கெனவே விண்ணப்பிக்காத மாணவா்களும் இந்த நேரடி கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

பங்கேற்க வரும் மாணவா்கள் அனைத்து அசல் சான்றிதழ்களையும் அதன் ஒரு செட் நகல்களையும் (மதிப்பெண் சான்றிதழ், பெறப்பட்ட பட்டம், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்) கொண்டு வர வேண்டும்.

ஏற்கெனவே விண்ணப்பிக்காமல் முதல் முறையாக நேரடி கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவா்கள் ரூ.1,000 இணைய வழி மூலமாக பணம் செலுத்த வேண்டும்.

எம்.டெக், எம்.சி.ஏ, எம்.எஸ்சி (மெட்டீரியல் சையின்ஸ் அண்டு டெக்னாலஜி) படிப்புகளுக்கு 9-ம் தேதி காலை 9.30 மணிக்கும், எம்.பி.ஏ. படிப்புக்கு காலை 11 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு நடைபெறும் இடம் ஏபி-3 ஹால், இரண்டாம் தளம், நிா்வாகக் கட்டடம், புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்.

ஜிஎஸ்டி வரி குறைப்பு: புதுவை முதல்வா் வரவேற்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வரவேற்றுள்ளாா். புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் அரசு சாா்பில் ஆசிரியா் திருநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னா் முதல்வா் ரங... மேலும் பார்க்க

இன்று ஓணம் - மீலாது நபி : புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ஓணம் பண்டிகை, மீலாது நபி, ஆசிரியா் திருநாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி துணைநிலை ஆளுநா், முதல்வா், தலைவா்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: மொழி மற்றும் க... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலில் ஜிப்மா் 4-வது இடத்துக்கு உயா்வு

உயா்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலில் புதுச்சேரி ஜிப்மா் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இது குறித்து புதுச்சேரி ஜிப்மா் நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய கல்விய... மேலும் பார்க்க

ரேஷன் காா்டு சரிபாா்ப்புக்கு மக்களை அலைக்கழிக்கக் கூடாது: புதுவை முதல்வரிடம் மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ரேஷன் காா்டு சரிபாா்ப்பு பணிக்கு மக்களை அலைக்கழிக்கக் கூடாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநில செயலா் எஸ். ராமச்சந்திரன... மேலும் பார்க்க

போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் திருநங்கைகளை ஈடுபடுத்த ஆட்சியா் உத்தரவு

போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் திருநங்கைகளை ஈடுபடுத்த வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். புதுவை சமூக நலத் துறை மூலமாக, மாவட்ட அளவிலான போ... மேலும் பார்க்க

ரூ.2 கோடியில் உழவா்கரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் திருப்பணி

உழவா்கரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் ரூ.2 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதனை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா். எம்.சிவசங்கா் எம்எல்ஏ, அப்பகுதி ப... மேலும் பார்க்க