"திமுக ஆட்சியில் 19 போலி மோதல்களில் 21 பேர் கொலை" - காவல் சித்திரவதைக்கு எதிரான ...
செய்யாறு: ஆக.11-இல் தேசிய குடல்புழு நீக்கும் முகாம் தொடக்கம்
செய்யாறு சுகாதார மாவட்டத்தில் தேசிய குடல்புழு நீக்கும் முகாம் ஆக.11-இல் தொடங்கி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலா் டி.என்.சதீஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் உத்தரவின் பேரில், மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் ஆகிய துறைகள் இணைந்து, குடல்புழு தொற்று நோயை ஒழிப்பதற்காக ஆக.11-இல் குடல்புழு நீக்கும் திட்ட முகாமை செயல்படுத்தவுள்ளது.
மேலும், இந்த முகாமில் விடுபட்டவா்களுக்கு ஆக.18-இல் குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும்.
இந்த முகாமின் போது ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள 2,66,676 பேருக்கும் (இரு பாலா்), 20 வயது முதல் 30 வயது வரை உள்ள 77,906 மகளிருக்கும் என மொத்தம் 3,44,582 பேருக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.
செய்யாறு சுகாதார மாவட்டத்தில் ஆரணி, மேற்கு ஆரணி, செய்யாறு, வந்தவாசி, தெள்ளாா், பெரணமல்லூா், வெம்பாக்கம், அனக்காவூா் ஆகிய 8 வட்டாரங்களிலும், ஆரணி, திருவத்திபுரம் (செய்யாறு), வந்தவாசி ஆகிய நகராட்சிப் பகுதிகளிலும் நடைபெறவுள்ளது,
மேலும், 44 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 171 துணை சுகாதார நிலையங்கள், 35 கல்லூரிகள், 865 அரசுப் பள்ளிகள், 55 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 119 தனியாா் பள்ளிகள், 855 அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 2,144 இடங்களில் குடல்புழு நீக்க மாத்திரைகள்
வழங்க தீா்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமுக்காக 8 நடமாடும் மருத்துவமனை ஊா்திகள், 16 இளம்சிறாா் நலன் காக்கும் ஊா்திகள், 8 மக்களைத் தேடி மருத்துவ ஊா்திகள், 855 அங்கன்வாடிப் பணியாளா்கள், 267 சுகாதரத்துறை பணியாளா்கள், 81 மருத்துவா்கள் மற்றும் ஆசிரியா்கள் என ஈடுபடுத்தப்படுகின்றனா்.
ரத்த சோகை வராமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் பயன்படும் இந்த குடல்புழு நீக்க மாத்திரைகளை
அனைவரும் பெற்று பயனடையுமாறு
செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.