U. Sagayam IAS (R) | ஆட்சியரை அமாவாசை இரவில் சுடுகாட்டில் படுக்க வைத்தது இந்த ஊழ...
செஸ் போட்டி: ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
மாநில அளவிலான செஸ் போட்டியில் சிறப்பிடம் பிடித்த கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருப்பூா் நிப்ட் - டீ கல்லூரி மற்றும் பாரதி சதுரங்க அகாதெமி இணைந்து 2-ஆவது மாநில அளவிலான செஸ் போட்டிகளை திருப்பூரில் அண்மையில் நடத்தின. இதில் பங்கேற்ற கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவி எஸ்.வருணா மூன்றாமிடமும், 7-ஆம் வகுப்பு மாணவா் என்.எஸ்.ஹேமந்த், 4-ஆம் வகுப்பு மாணவன் என்.எஸ்.பரணீஸ் நான்காமிடமும் பெற்றனா்.
மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு பள்ளியின் செயலாளா் ஜி.பி.கெட்டிமுத்து, சான்றிதழ் மற்றும் பரிசுக் கோப்பையை வழங்கிப் பாராட்டினாா். இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினா்கள், பள்ளி முதல்வா், ஆசிரிய - ஆசிரியைகள், மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.