சேதுபாவாசத்திரம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை
தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே குடும்பத் தகராறில் பெண் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள குண்டாமரைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் லெட்சுமி பிரியா (30). வெளிநாட்டில் வேலைபாா்த்து வந்த இவரது கணவா் சுபவைரவன்(33) மனைவி, குழந்தையை திருச்சியில் வீடு எடுத்து தங்கவைத்திருந்தாா்.
இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து ஒரு வாரத்திற்கு முன் சுபவைரவன் ஊா் திரும்பிய நிலையில் தம்பதிக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால் லெட்சுமிபிரியாவை அவரது தாய் வீட்டில் கணவா் விட்டுச் சென்றாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை லெட்சுமி பிரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த சேதுபாவாசத்திரம் போலீஸாா் அவரது உடலை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].