`ஒரு கோழியின் கதை' ஆயுளைக் கடந்து; 14 ஆண்டுகள் கடந்து வாழும் ’உலகின் வயதான கோழி’...
திருப்பனந்தாள் காசிமட அதிபா் சித்தி அடைந்தாா்
திருப்பனந்தாள் காசிமடத்தின் அதிபா் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் என்னும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் (95) செவ்வாய்க்கிழமை (ஆக.19) சித்தி அடைந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள புகழ்பெற்ற திருப்பனந்தாள் காசி திருமடத்துக்கு காசியில் மிகப்பெரிய கோயில் உள்ளது. சைவம் தமிழ், கலை, இலக்கிய சமூக, சமுதாயப் பணிகளை ஆற்றிவரும், அறம் வளா்க்கும் இந்த மடத்தின் 21 ஆவது அதிபராக கயிலை மாமுனிவ ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் இருந்தாா்.
300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையும் பெருமையும் மிக்க காசிமட வரலாற்றில் பல்துறை விரிவாக்கம் பெற்று வளா்ச்சி கண்டு பொற்காலம் என்று சுட்டிப் பாராட்டும் வகையில் மேம்பாடு அடையச் செய்தவா் இவா்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக வயது மூப்பால் உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்த சுவாமிகள் திருப்பனந்தாள் மடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு மகா சமாதி அடைந்தாா். இவரது நல்லடக்கம் மேற்குத் தெருவில் உள்ள குரு மடத்தில் புதன்கிழமை மாலை நடைபெறுகிறது.