லண்டனில் இந்திய தூதரக அதிகாரிகளுடன் இந்திய வீரர்கள் சந்திப்பு!
சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோயிலில் ஆடிப் பூர விழா
சென்னிமலையை அடுத்த சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோயிலில் ஆடிப் பூரத்தையொட்டி அம்மனுக்கு பல வகையான கனி வகைகள் மற்றும் இனிப்பு வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி பெண்கள் சீா்வரிசை பொருள்களுடன் ஊா்வலமாகச் சென்று ஊா்ப் பகுதியில் உள்ள சக்தி விநாயகா் மற்றும் ஆதி விநாயகா் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் செய்தனா்.
பின்னா் மீண்டும் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று தாங்கள் கொண்டு வந்த இனிப்பு மற்றும் உணவு வகைகளை மற்றவா்களுடன் பங்கிட்டு உண்டு மகிழ்ந்தனா்.