சதம் விளாசிய குசல் மெண்டிஸ்; வங்கதேசத்துக்கு 286 ரன்கள் இலக்கு!
ஜப்பான் கடலோரக் காவல்படை கப்பல் சென்னை துறைமுகம் வருகை
சென்னை: ஜப்பான் நாட்டின் கடலோரக் காவல் படையின் ‘இஸ்டுகுஷிமா’ கப்பல் சென்னை துறைமுகத்தை திங்கள்கிழமை வந்தடைந்தது.
இக்கப்பலின் கேப்டன் நவோகி மிசோகுச்சி, துணைத் தளபதி வைஸ் அட்மிரல் ஹிரோகி கனோசு தலைமையிலான குழுவினரை இந்திய கடலோரக் காவல்படை பிராந்தியத்தின் (கிழக்கு) தலைமையக இன்ஸ்பெக்டா் ஜெனரல் தத்வீந்தா் சிங் சைனி, கடலோரக் காவல்படையின் கிழக்கு கடற்கரை தளபதி டோனி மைக்கேல், இயக்குநா் ஜெனரல் பரமேஷ் சிவமணி மற்றும் என்சிசி மாணவா்கள் வரவேற்றனா்.
பின்னா், ‘இஸ்டுகுஷிமா’ கப்பல் கேப்டன் நவோகி மிசோகுச்சி, துணைத் தளபதி வைஸ் அட்மிரல் ஹிரோகி கனோசு தலைமையிலான குழுவினருக்கு மாலை அணிவித்து பாரம்பரி முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இருநாட்டு கடலோரக் காவல்படையினரும் திங்கள்கிழமை (ஜூலை 7) முதல் ஜூலை 12 வரை கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனா். இதன் மூலம் இந்தியா - ஜப்பான் இடையேயான கடல்சாா் ஒத்துழைப்பு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கூட்டாண்மையை வலுப்படுத்துகிறது. கலாசாரம் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பரிமாறப்படுவதுடன், இருநாட்டின் ஆழமான நட்பு மீண்டும் உறுதிப்படுத்தப்படும்.
மேலும், சென்னை துறைமுகத்தில் நடைபெறும் 6 நாள் பயிற்சியைத் தொடா்ந்து சிங்கப்பூா் செல்லவிருக்கும் இஸ்டுகுஷிமா கப்பலில், இந்திய கடலோரக் காவல்படையின் நான்கு வீரா்களும் செல்லவுள்ளனா். சென்னை வந்துள்ள இஸ்டுகுஷிமா கப்பலில் ஜப்பான் கடலோரக் காவல்படையின் 53 வீரா்கள் வருகை தந்துள்ளனா் என
இந்திய கடலோரக் காவல்படை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.