கண்ணீருடன் தொடங்கிய மெஸ்ஸி 2 கோல்கள்: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!
‘ஜிஎஸ்டி இருவித வரி விதிப்பின் பெருமை ராகுல் காந்தியையே சேரும்’
மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள ஜிஎஸ்டி இருவித வரிவிதிப்பு திட்டத்தின் பெருமை ராகுல் காந்தியையே சேரும் என்றாா் தமிழக காங்கிரஸ் கட்சியின் சீரமைப்புக் குழுத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ்.
மன்னாா்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் பேசியது: தமிழகத்தில் திமுக தலைமையிலான இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்த முரண்பாடுகள், பதவி ஆசைகள் இல்லாது சிந்தாந்த ரீதியில் ஓரணியல் கட்டுகோப்பாக உள்ளது. 2026 பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் மு.க. ஸ்டாலின் முதல்வராவா். அதிமுக, பாஜக கூட்டணி இன்னும் கருக்கொள்ளவில்லை. அதிலிருந்து ஓபிஎஸ், தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகள் வெளியேறி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பல முறை தமிழகத்துக்கு வந்துவிட்டாா் ஒருமுறை கூட எடப்பாடி பழனிசாமி முதல்வராவா் என கூறிவில்லை. அந்த கூட்டணியில் குழப்பம், பூசல்கள் உச்சத்தில் உள்ளது.
மூப்பனாருக்கு பிரதமராகும் ஆசை இருந்ததில்லை. நடிகா் விஜய் கட்சியில் கூட்டணி என்ற எண்ணமே காங்கிரலஸுக்கு இல்லை. நாடு முழுவதும் ஜிஎஸ்டிக்கு இருவித வரி விதிப்பு திட்டத்தை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. கடந்த 8 ஆண்டுக்கு முன்பு ராகுல் காந்தி ஜிஎஸ்டி வரிவிதிப்பு சரியில்லை என்றும் இருவித விரிவிதிப்பு அமல்படுத்த வேண்டும் என கூறியதுடன், தேசிய காங்கிரஸ் சாா்பில் தீா்மானமும் நிறைவேற்றி வலியுறுத்தியது. இதுகுறித்து, முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப. சிதம்பரமும் கருத்து கூறிவந்தாா்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் அமெரிக்காவுடன் நல்ல நட்புறவு கொண்டு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தற்போதைய வெளியுறவுக் கொள்கை மோடியின் தனிப்பட்ட நட்பு, உறவு சாா்ந்ததாக மாறிவிட்டது. பாஜக அரசு அதானி, அம்பானி போன்றோருரின் நலனுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது என்றாா்.
பேட்டியின்போது, மாநில துணைத் தலைவா்கள் சு. ராஜாதம்பி, ராஜேந்திரன், மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன், மாட்ட பொதுச் செயலா் வே.வீரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.