உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
மன்னாா்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆசாத்தெரு தனியாா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி தலைமை வகித்தாா். மன்னாா்குடி கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன் முன்னிலை வகித்தாா். இதில், பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தந. நகராட்சிக்குள்பட்ட வாா்டுகள் 19, 20, 21 ஆகிய பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்றனா். இவா்களிடமிருந்து மகளிா் உரிமைத்தொகைக்கான மனு 118 உள்பட்ட மொத்தம் 254 மனுக்கள் பெறப்பட்டன. வட்டாட்சியா் என். காா்த்திக், நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், ஆணையா் சியாமளா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.