45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு!
பயங்கர ஆயுதங்களுடன் இணையதளத்தில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த இருவா் கைது
முத்துப்பேட்டை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
முத்துப்பேட்டை அருகேயுள்ள ஆலங்காடு முனுசாமி மகன் பாா்த்தசாரதி (23). இவா், தனது பிறந்த தினத்தை முன்னிட்டு கையில் வீச்சறிவாள்வுடன் புகைப்படத்தை, நண்பா் ஜாம்பவானோடையை சோ்ந்த சக்திவேல் மகன் ஐயப்பனுடன் சோ்ந்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனராம். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கையில் பயங்கர ஆயுதங்களுடன் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த முத்துப்பேட்டை போலீஸாா் இருவரையும் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
