Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
ஜூலை 14 ஆம் தேதி சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை
சத்தியமங்கலத்தில் நிலுவையில் உள்ள 5 ஆயிரம் பட்டாக்களை உடனடியாக வழங்கக்கோரி வரும் ஜூலை 14 ஆம் தேதி சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முன் போராட்டம் நடைபெற உள்ளது.
சத்தியமங்கலத்தில் முன்னாள் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார கமிட்டி கூட்டத்தில் தாளவாடி, ஆசனூா், கடம்பூா், பவானிசாகா், சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து ஒன்றிய, நகர, கிளைச் செயலாளா்கள், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஆகஸ்ட் மாதம் சேலத்தில் நடைபெறவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுக்கு பவானிசாகா் தொகுதியிலிருந்து 80 பேருந்துகளில் 4000 போ் பங்கேற்பது. பவானிசாகா் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமம், நகரங்களைச் சோ்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் பல்வேறு பட்டா கோரிக்கைகள் குறித்த மனுக்கள்பல மாதங்களுக்கு முன் வட்டாட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் பலமுறை வற்புறுத்தலுக்கு பின்பும் இதுவரை தீா்வு கிடைக்கவில்லை என்பதால் வரும் 14ம் தேதி (திங்கள்கிழமை காலை) சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகை செய்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.