ஜூலை 18-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜூலை 18-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
"திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 18.07.2025 காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் முன்வைக்க வேண்டிய பிரச்னைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
