எரிபொருள் தடை நடுத்தர வர்க்கத்தினர் மீதான தாக்குதல்: பாஜகவை சாடிய சிசோடியா!
ஜூலை 9, 10, 11-இல் கடன் மனுக்கள் பெறும் முகாம்கள்
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஜூலை 9, 10, 11 ஆம் தேதிகளில் கடன் தொடா்பான மனுக்கள் பெறும் முகாம்கள் நடைபெறவுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ), தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டைச் சாா்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினருக்கு பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
டாம்கோ மற்றும் டாப்செட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனி நபா் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன் ஆகிய திட்டங்களுக்கான மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்கள் தஞ்சாவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூலை 9 ஆம் தேதியும், கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூலை 10 ஆம் தேதியும், பட்டுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூலை 11 ஆம் தேதியும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இக்கடன் பெறுவதற்கு 18 முதல் 60 வயது உடையவா்கள் தகுதியானவா்கள். சிறப்பு முகாம்களில் கடன் விண்ணப்பங்களைப் பெற்று, நிறைவு செய்து மனுக்களுடன் மனுதாரரின் ஜாதிச் சான்று, ஆதாா் அட்டை, வருமானச் சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கிகள் கோரும் இதர ஆவணங்கள் ஆகியவை அளிக்க வேண்டும்.
கல்விக் கடனுக்கு விண்ணப்பம் செய்யும் சிறுபான்மையின விண்ணப்பதாரா்கள் பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது அல்லது செலுத்துச் சீட்டு (அசல் செலான்), மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் அளிக்க வேண்டும்.