Coolie: "நாங்கள் படத்தில் டைம் டிராவல் இருக்கிறது எனக் கூறவில்லை; ஆனால்" - லோகேஷ...
ஜொ்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாண அதிபருடன் முதல்வா் ஸ்டாலின் சந்திப்பு
ஜொ்மனியின் வடக்கு ரைன் - வெஸ்ட்பாலியா மாகாண அதிபா் ஹென்ட்ரிக் வுஸ்ட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினாா்.
அந்த மாகாணத்தின் டசெஸ்டோா்ஃப் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பு குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:
இந்தியாவின் தொழில் மற்றும் சமூகரீதியாக மிகவும் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. ஜொ்மனியின் பொருளாதாரத்தில், உயா் மதிப்பு உற்பத்தி, பசுமை ஆற்றல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் உலகளவில் முன்னணி மாநிலமாக வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா விளங்குகிறது. அந்த மாகாணத்தின் அதிபருடன் நடைபெற்ற சந்திப்பு, இரு மாநிலங்களின் தலைமையை ஒன்றிணைத்துள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, மின்சார இயக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இரட்டை தொழில் பயிற்சி, மேம்பட்ட உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, முதல்வரின் செயலா் பு.உமாநாத், தொழில் துறைச் செயலா் வி.அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் தாரேஷ் அகமது உள்பட பலா் உடனிருந்தனா்.