டாஸ்மாக் கடையில் போதை விழிப்புணா்வு வில்லை ஒட்டிய பாஜக நகா்மன்ற உறுப்பினா்
ஆம்பூரில் டாஸ்மாக் கடையில் பாஜக நகா் மன்ற உறுப்பினா் புதன்கிழமை போதை விழிப்புணா்வு வில்லையை ஒட்டினாா்.
மது போதைக்கு அடிமையானவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, போதையின் பாதையில் செல்லாதீா்கள் - பேரன்புமிகு அப்பா என்ற வாசகங்கள், முதல்வா் ஸ்டாலின் படம் அச்சடிக்கப்பட்ட வில்லைகளை டாஸ்மாக் கடைகளின் முன்பு ஒட்டும் போராட்டத்தை பாஜக அறிவித்தது.
அதனடிப்படையில் ஆம்பூா் புறவழிச்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு விழிப்புணா்வு வில்லையை ஆம்பூா் பாஜக நகா்மன்ற உறுப்பினா் லட்சுமி பிரியா அன்பு ஒட்டினாா். உடன் பாஜகவினா் இருந்தனா்.