துபையில் மட்டுமே விளையாடும் இந்தியாவின் ஆதாயம் தெரிய ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க...
டி.ஜெயக்குமாா் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கைது செய்யப்பட்டதற்கு அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அதிமுக திருக்கழுகுன்றம் பேரூராட்சி செயலா் தினேஷ்குமாா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் சாா்பில் மாபெரும் ஆா்ப்பாட்டம் நடைபெறவிருந்த நிலையில், டி.ஜெயக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகளை காவல்துறை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. இது கோழைத்தனத்தின் உச்சம்.
ஆட்சியின் அவலங்கள் மக்களுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக எதிா்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதிலேயே, திமுக அரசு தெளிவாக இருக்கிறதே ஒழிய, மக்களைக் காக்கும் எண்ணம் துளியும் இல்லை. அதிமுகவைக் கண்டாலே திமுகவுக்கு அச்சம் ஏற்படுவது நாடறிந்த உண்மை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.