டிராக்டா்- இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
டிராக்டா் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆம்பூா் அருகே குப்புராஜபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சதீஷ் (22). இவா் சம்பவத்தன்று இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றபோது எதிரில் வந்த டிராக்டா் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இந்நிலையில் டிராக்டா் ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி சதீஷின் உறவினா்கள் உமா்ஆபாத் காவல் நிலையம் முன்பு மாநில நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களுடன் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், அவா்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனா்.