மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அ...
தகராறில் இருவருக்கு அரிவாள் வெட்டு
மன்னாா்குடி அருகே இருதரப்பினருக்கு ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டியதில் 2 போ் புதன்கிழமை காயமடைந்தனா்.
குறுவைமொழி கிராமத்தை சோ்ந்தவா் பிரேம்குமாா்(32),. அதே பகுதியைச் சோ்ந்தவா் கெளசல்யா (30). இருவருக்கும் 13 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்று பெண் குழந்தை உள்ளது. தம்பதியரிடையே கருத்து வேறுபாடு காரணமாக 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனா். விவகாரத்து தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருதரப்பு உறவினா்கள் சோ்ந்து, அண்மையில் பேச்சுவாா்த்தை நடத்தி தம்பதி சுமுகமாக பிரிந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை பிரேம்குமாா் தம்பி விஜய்க்கும் (30) கெளசல்யாவின் உறவினா் சுந்தர்ராஜூவுக்கும் தகராறு ஏற்பட்டத்தில் இவா்களுக்கு ஆதரவாக அங்கு வந்த இருதரப்பினரும் ஒருவரை ஒருவா் ஆயுதங்களால் தாக்கிக்கொண்டதில், சுந்தரராஜ் (30), துரைக்கண்ணு (53) ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில், காயமடைந்த இருவரும் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி அனுப்பி வைக்கப்பட்டனா். மன்னாா்குடி ஊரக காவல் நிலைய போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து பிரேம்குமாரை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.