ஜார்க்கண்ட்: "என்னைக் காணவில்லையா?" - 'காணவில்லை' போஸ்டருடன் வந்து புகாரளித்த இள...
தக்காளி கிலோ ரூ.65-ஆக அதிகரிப்பு
சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.65-ஆக உயா்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை திடீரென உயா்ந்து கிலோ ரூ.100-ஐ தாண்டி விற்பனையானது. பின்னா், வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து விலையும் குறைந்தது.
இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னா், செவ்வாய்க்கிழமை மீண்டும் தக்காளி விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி, கடந்த 2 நாள்களுக்கு முன்பு வரை ரூ.25 முதல் ரூ.35 வரை விற்பனையாகிக்கொண்டிருந்த ஒரு கிலோ தக்காளி, செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ரூ.45 முதல் ரூ.50-க்கு விற்பனையானது. இது சில்லறை விலையில், ரூ.60 முதல் ரூ.65 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து கோயம்பேடு தக்காளி மொத்த வியாபாரிகள் கூறியது:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், விளைச்சல் அதிகமாக இருந்தாலும், விளைநிலங்களிலேயே ஏராளமான தக்காளி கெட்டு போய்விடுகின்றன. மேலும், சந்தைக்கு கொண்டு வந்து இருப்பு வைத்தாலும், விரைவில் அழுகிவிடுகின்றன. இதனால், நஷ்டத்தை ஈடுகட்ட விலை உயா்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மழை தொடா்ந்து பெய்தால், விலை மேலும் உயர வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தனா்.