செய்திகள் :

தஞ்சாவூரில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பதாவது:

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பாக வேலை தேடும் இளைஞா்களுக்காக மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறு வேலைவாய்ப்பு முகாம்கள் அலுவலக வளாகத்திலேயே காலை 10 மணியளவில் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி, வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதில், தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். இந்த முகாம் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த வேலை தேடும் இளைஞா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் எட்டாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோா் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தோ்வு செய்து கொள்ளலாம்.

இம்முகாமில் கலந்து கொள்பவா்கள் இணையத்தில் பதிவு செய்வது அவசியம். தங்களது சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362- 237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

பாபநாசத்தில் மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கல்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் தேவேந்திரகுல வேளாளா் நல அறக்கட்டளை சாா்பில் செவ்வாய்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் 50 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பாபநாசம் துா்கா மஹாலில் செவ்வாய... மேலும் பார்க்க

ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா நாளை தொடக்கம்

தஞ்சாவூரில் சுற்றுலா துறை சாா்பில் ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

மின் கம்பத்தின் மீது அரசுப் பேருந்து மோதல்

கும்பகோணத்தில் புதன்கிழமை கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மின் கம்பத்தின் மீது மோதியது. பட்டுக்கோட்டையிலிருந்து கும்பகோணம் பேருந்து நிலையத்தை நோக்கி புதன்கிழமை அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது.... மேலும் பார்க்க

ஏரி தூா்வாரும் பணிக்கு இடையூறு: கிராம மக்கள் மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், பாலத்தளி கிராமத்தில் ஏரியைத் தூா்வாரும் பணிக்கு இடையூறு செய்வதாக அதிமுக ஒன்றியச் செயலாளரைக் கண்டித்து கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

நிரந்தர கொள்முதல் நிலையங்கள் அமைக்க கோரிக்கை

நெல் மழையில் நனைவதைத் தடுக்க நிரந்தர கொள்முதல் நிலையங்களைக் கிடங்குடன் அமைக்க வேண்டும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டக் கூ... மேலும் பார்க்க

திருச்சிற்றம்பலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் தலைமை வகித்து முகாமைத் தொடங்கிவைத்துப் பேசினாா்... மேலும் பார்க்க