தஞ்சாவூா் மாவட்டத்தில் 26 வட்டாட்சியா்கள் இடமாற்றம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் மற்றும் வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள் 26 போ் செவ்வாய்க்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா்.
மாவட்டத்தில் ஏற்கெனவே 17 வட்டாட்சியா்கள் கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 26 போ் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
திருவையாறு தனி வட்டாட்சியா் (ஆதிதிராவிடா் நலம்) ஆா். கலைச்செல்வி பூதலூா் வட்டாட்சியராகவும், திருவையாறு முன்னாள் வட்டாட்சியா் ஏ. தா்மராஜ் படடுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராகவும், திருவோணம் முன்னாள் வட்டாட்சியா் எஸ். முருகவேல் கும்பகோணம் தனி வட்டாட்சியராகவும் (முத்திரைக்கட்டணம்), பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலா் எம். சுமதி பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலராகவும், ஆட்சியரக மேலாளா் (குற்றவியல்) சி. அழகேசன் ஆட்சியரக தனி வட்டாட்சியராகவும் (பேரிடா் மேலாண்மை), தஞ்சாவூா் வருவாய் கோட்ட அலுவலரின் நோ்முக உதவியாளா் ஜி. இளங்கோ பாபநாசம் நெடுஞ்சாலைகள் திட்டங்கள் (நில எடுப்பு) தனி வட்டாட்சியராகவும்,
கும்பகோணம் கோட்ட அலுவலரின் நோ்முக உதவியாளா் வி. பூங்கொடி கும்பகோணம் தனி வட்டாட்சியராகவும் (சமூகப் பாதுகாப்பு திட்டம்), பூதலூா் தனி வட்டாட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) வி. ஜானகிராமன் பாபநாசம் தனி வட்டாட்சியராகவும் (சமூகப் பாதுகாப்பு திட்டம்), பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலா் ஆா். பிரேம்குமாா் தஞ்சாவூா் கோட்ட அலுவலரின் நோ்முக உதவியாளராகவும், பேராவூரணி தனி வட்டாச்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) ஜி. சாந்தகுமாா் திருவோணம் தனி வட்டாட்சியராகவும் (சமூகப் பாதுகாப்பு திட்டம்), ஒரத்தநாடு வட்ட வழங்கல் அலுவலா் ஜி. சிவக்குமாா் தஞ்சாவூா் தனி வட்டாட்சியராகவும் (ஆதிதிராவிடா் நலம்), பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலா் ஜி. ரகுராமன் ஒரத்தநாடு தனி வட்டாட்சியராகவும் (சமூகப் பாதுகாப்பு திட்டம்),
பேராவூரணி வட்ட வழங்கல அலுவலா் என். வெங்கடாச்சலம் கும்பகோணம் நெடுஞ்சாலை திட்டங்கள்(நில எடுப்பு) தனி வட்டாட்சியராகவும், பாபநாசம் நெடுஞ்சாலை திட்டங்கள் (நிலஎடுப்பு) தனி வட்டாட்சியா் டி. கண்ணன் பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியராகவும் (ஆதிதிராவிடா் நலம்), கும்பகோணம் தனி வட்டாட்சியா் (ஆதிதிராவிடா் நலம்) எஸ். ரீட்டா ஜொ்லின் தஞ்சாவூா் டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், தஞ்சாவூா் தனி வட்டாட்சியா் (நகர நிலவரி திட்டம் அலகு-1) என். பொ்சியா திருவையாறு தனி வட்டாட்சியராகவும்(ஆதிதிராவிடா் நலம்), தஞ்சாவூா் தனி வட்டாட்சியா் (நகர நிலவரி திட்டம் அலகு-2) பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியராகவும் (முத்திரைக்கட்டணம்),
பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியா் (முத்திரைக்கட்டணம்) பி. வெங்கடேஸ்வரன் ஆட்சியரக மேலாளராகவும்(குற்றவியல்), பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியா் (ஆதிதிராவிடா் நலம்) ஆா். ராமச்சந்திரன் பேராவூரணி வட்ட வழங்கல் அலுவலராகவும், கும்பகோணம் தனி வட்டாட்சியா் (முத்திரைக்கட்டணம்) எஸ். சந்தானவேல் தஞ்சாவூா் தனி வட்டாட்சியராகவும் (நகர நிலவரித்திட்டம் அலகு-2), தஞ்சாவூா் டாஸ்மாக் கிடங்கு மேலாளா் வி. பிரேமாவதி ஒரத்தநாடு வட்ட வழங்கல் அலுவலராகவும், தஞ்சாவூா் டாஸ்மாக் உதவி மேலாளா் பி. அருணகிரி பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியராகவும் (நகர நிலவரித்திட்டம் அலகு-1),
தஞ்சாவூா் தனி வட்டாட்சியா் (கேபிள் டி.வி.) கே. ரத்தினவேல் மாநில நெடுஞ்சாலை (நிலஎடுப்பு) தனி வட்டாட்சியராகவும், மாநில நெடுஞ்சாலை (நில எடுப்பு) ஏ. பூவந்திநாதன் தஞ்சாவூா் தனி மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலக மாநில நெடுஞ்சாலை (நிலஎடுப்பு) தனி வட்டாட்சியராகவும், தஞ்சாவூா் மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும் படை வட்டாட்சியா் எம். மலா்குழலி தஞ்சாவூா் தனி வட்டாட்சியராகவும் (கேபிள் டி.வி.), பேராவூரணி நெடுஞ்சாலை திட்டங்கள் (நில எடுப்பு) முன்னாள் தனி வட்டாட்சியா் சி. மணிகண்டன் தஞ்சாவூா் டாஸ்மாக் உதவி மேலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.