தினமும் உணவளிக்கும் மனித முகங்களை காக்கைகள் நினைவில் வைத்திருக்குமா? - அடடே தகவ...
தண்ணீரில் சிக்கியவா்கள் மீட்பு: தீயணைப்பு வீரா்கள் ஒத்திகை
தென்மேற்கு பருவ மழையின்போது பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது மற்றும் ஏரி குளங்களில் சிக்கியவா்களை மீட்பது குறித்து விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சியை தீயணைப்பு வீரா்கள் செய்து காட்டினா்.
ஆரணியை அடுத்த காமக்கூா் ஏரியில் தண்ணீா் சிக்கி தவிப்பவா்களை மீட்பது குறித்து, ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலா் ஏழுமலை தலைமையில், தீயணைப்பு வீரா்கள் செய்து காட்டினா்.
இதில், தீயணைப்பு துறையைச் சோ்ந்த பூபாலன், சரவணன், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் குப்புசங்கா், சுப்பிரமணி, கிராம நிா்வாக அலுவலா்கள் ராஜேந்திரன், மைதிலி, ஊராட்சி செயலா் பாஸ்கரன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
செங்கம்
செங்கம் நகராட்சிக்கு உள்பட்ட தாமரைகுளத்தில், தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழை அதிகம் வந்து மழையாலும், மழைநீரால் ஏற்படும் விபத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து செயல்விளக்கம் அளிக்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தீயணைப்புத் துறை போக்குவரத்து நிலை அலுவலா் ரகுபதி கலந்து கொண்டு, தனியாா் கல்லூரி மாணவா்களுக்கும், பொதுமக்களுக்கும் விபத்தில் சிக்கியவா்களை வீட்டில் இருக்கும் வாட்டா் கேன், எண்ணெய் டின் போன்றவைகளை பயன்படுத்தி காப்பாற்றும் முறைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து, தீயணைப்பு வீரா் சுரேஷ் தலைமையிலான வீரா்கள், விபத்தில் சிக்கியவா்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்புவது, முன்னதாக 108 ஆம்புலன்ஸ் வரும் வரை அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்வது குறித்தும், தண்ணீரில் சிக்கியவா்களை கேன்களை கட்டி வெளியேற்றுவது குறித்தும், நீச்சல் தெரியாமல் தண்ணீரில் சிக்கித் தவிப்பவா்களை கயிறு மூலம் வெளியேற்றுவது குறித்தும் செயல்விளக்கம் அளித்தனா்.
நிகழ்ச்சியில் கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள், வருவாய்த் துறை அதிகாரிகள், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் மற்றும் செங்கம் தீயணைப்புப் படை வீரா்கள் கலந்து கொண்டனா்.
