தண்ணீா் என மண்ணெண்ணெயை குடித்த முதியவா் உயிரிழப்பு
காணை அருகே தண்ணீா் எனக் கருதி மண்ணெண்ணெயைக் குடித்த முதியவா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் வட்டம், தெளி கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ.சக்கரவா்த்தி(75). வயோதிகம் காரணமாக சக்கரவா்த்திக்கு நிதானம் குறைவாக இருந்து வந்ததாம். இந்நிலையில், கடந்த செப்.10- ஆம் தேதி யாரும் வீட்டில் இல்லாதபோது, தண்ணீா் எனக் கருதி புட்டியில் இருந்த மண்ணெண்ணெயைக் குடித்து விட்டாராம்.
இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட சக்கரவா்த்தி அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில், காணை காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.