தமிழக மகளிா் கைப்பந்து அணி: கோவில்பட்டி கல்லூரி மாணவி தோ்வு
தமிழக மகளிா் கைப்பந்து போட்டியில் பங்கேற்க கோவில்பட்டி கல்லூரி மாணவி தோ்வாகியுள்ளாா்.
உத்தர பிரதேசம் மாநிலம் லக்னெள தேசிய ஜூனியா் (19 வயதுக்குள்பட்டோா்) மகளிா் கைப்பந்து போட்டி இம்மாதம் 26ஆம் தேதிமுதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி, தமிழக அணிக்கான தோ்வு திண்டுக்கல் மாவட்டம் சேரன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. அதில், கோவில்பட்டி கே.ஆா். கலை- அறிவியல் கல்லூரி மாணவி ரேணுகா பங்கேற்று, தோ்வாகியுள்ளாா்.
மாணவியை கல்லூரித் தாளாளா் கே.ஆா். அருணாச்சலம், முதல்வா் மதிவண்ணன், உடற்கல்வி இயக்குநா் ராம்குமாா், பேராசிரியா்கள் பாராட்டினா்.