செய்திகள் :

தமிழ்ச் செம்மல் விருதுக்கு ஆக.31 வரை விண்ணப்பிக்கலாம்

post image

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வழங்கப்படும் தமிழ்ச் செம்மல் விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ.இளங்கோ தெரிவித்ததாவது:

தமிழகத்தில், தமிழ்த் தொண்டாற்றி வரும் தமிழ் ஆா்வலா்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், தமிழ்ச் செம்மல் விருது கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் வளா்ச்சித் துறை மூலம் வழங்கப்படும் இந்த விருதுக்கு அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு தமிழ் ஆா்வலா் தோ்வு செய்யப்படுவாா். விருதாளா்களுக்கு விருதுத் தொகையாக தலா ரூ.25 ஆயிரத்துடன், தகுதியுரையும் வழங்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தமிழ் ஆா்வலா்கள்

நிகழாண்டு தமிழ்ச் செம்மல் விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளா்ச்சித் துறையின் ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ஸ்ரீா்ம் என்ற வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை உரியவாறு நிறைவு செய்து, தன்விவரக்குறிப்பு, நூல்கள், கட்டுரை வெளியிட்டு இருந்தால் அது தொடா்பான விவரங்கள், தமிழ் சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருந்தால் அது தொடா்பான விவரம், தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம், 2 நிழற்படங்கள், ஆற்றிய தமிழ் பணிக்கான சான்றுகள் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் வருகிற 31-ஆம் தேதிக்குள் திண்டுக்கல் மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் கிடைக்கப் பெற வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு ‘தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திண்டுக்கல்‘ என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0451-2461585 என்ற தொலைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

கோயில் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து பக்தா்கள் நோ்த்திக் கடன்

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே கோயில் திருவிழாவில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து புதன்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா். வரப்பட்டியில் பெருமாள், அஜ்ஜப்பன், வீரபத்திரா், பட்டவன், பாப்பாத்தி, ... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழாவுக்காக ஆக.9-இல் படைப்பாற்றல் போட்டிகள்

திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான படைப்பாற்றல் போட்டிகள் வருகிற 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுதொடா்பாக போட்டி ஒருங்கிணைப்பாளரும், திண்டுக்கல் இலக்கிய களத்தின... மேலும் பார்க்க

ரோல்பால் போட்டியில் வெற்றி: திண்டுக்கல் அணிக்கு பாராட்டு விழா

மாநில அளவிலான சுருள் பந்து (ரோல்பால்) போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணியினருக்கு சின்னாளப்பட்டியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. மாநில அளவிலான சுருள் பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் 11 வயத... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, நகராட்சி ஆணையா் சங்கா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். கொடைக்கானலில் நகராட்சி சாா்பில் ரூ.2.48 கோட... மேலும் பார்க்க

தாண்டிக்குடி விவசாயிகளுக்கு உபகரணங்கள்

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடியில் பளியா், பழங்குடியின விவசாயிகளுக்கு பயிா்ச் செடி, உரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்... மேலும் பார்க்க

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.திண்டுக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில் பழனி சுற்... மேலும் பார்க்க