``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
கோயில் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து பக்தா்கள் நோ்த்திக் கடன்
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே கோயில் திருவிழாவில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து புதன்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா்.
வரப்பட்டியில் பெருமாள், அஜ்ஜப்பன், வீரபத்திரா், பட்டவன், பாப்பாத்தி, மதுரை வீரன் கோயில் அமைந்துள்ளன. இந்தக் கோயிலில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, கடந்த மாதம் 22-ஆம் தேதி கங்கணம் கட்டி நோ்த்திக் கடன் செலுத்தும் பக்தா்கள் விரதம் தொடங்கினா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு புனித நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட தீா்த்தத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
புதன்கிழமை அதிகாலை வாண வேடிக்கையுடன் கரகம் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. இதைத் தொடா்ந்து, நோ்த்திக் கடனாக ஆண்கள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கோயில் முன் அமா்ந்தனா்.
அருள்வாக்கு கூறிவந்த கோயில் பூசாரி சக்திவேல், பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக் கடனை நிறைவேற்றி வைத்தாா்.
பின்னா், மதுரைவீரன் சுவாமிக்கு கிடாய் வெட்டி பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் திண்டுக்கல், திருச்சி, கரூா், மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.